தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி!!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குநர் சமுத்திரக்கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

மக்களவை தேர்தல்
mk
 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - அதிமுக போன்ற பிரதான கட்சிகள் 
வாக்கு  சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் 
su. venkatesan
 ஆனால் மதுரையில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாது,  இயக்குநர்கள் கரு.பழனியப்பன், ராஜூமுருகன், லெனின் பாரதி நடிகை ரோகிணி, கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 
 நண்பர் என்ற முறையில் வெங்கடேசனை ஆதரவு 
samuthirakani
 அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான  சமுத்திரக்கனி சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,   உலகம் முழுவதும் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மதுரையின் புகழான கீழடியை தனது வேள்பாரி படைப்பில் கொண்டு வந்த எழுத்தாளர் சு. வெங்கடேசன். இது போன்ற இளம் எழுத்தாளர் ஒருவருக்கு உங்கள் வாக்கைச்  செலுத்துங்கள். அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக  முதல் தலைமுறை வாக்காளர்களிடம் வேண்டிக் கொள்கிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையில் வெங்கடேசனை ஆதரித்து உங்களிடம் வாக்கு  கேட்டு வந்தாளேன்' என்றார். 

No comments

Powered by Blogger.