ஜெயலலிதாவின் கடைசி 75 நாட்கள்; சர்ச்சையை கிளப்பும் சசி லலிதா திரைப்படம்?

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், 'ஜெயம் மூவிஸ்' என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் 'சசி லலிதா'. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார். 
இதுகுறித்து அவர், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.
சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை,  அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும் விதமாக இப்படம் இருக்கும்.
குறிப்பாக,  ஜெயலலிதாவின் கடைசி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப் படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும். சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும். இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் தொடரும் வேளையில், இப்படி ஒரு படம் உருவாகவுள்ளது. அதேபோல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க திட்டமிட்டிருக்கிறார். கங்கனா ரனாவத் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.