என் ஓட்டை யாரோ போட்டுட்டாங்க: புலம்பும் ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை அதிகாரி!!

ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை அதிகாரியின் வாக்கை அவருக்கே தெரியாமல் தபால் வாக்கின் மூலம் செலுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ec
வாக்குப்பதிவின் போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால், தபால் மூலம் வாக்களிக்கச் சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி, எல்லை பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்கின் மூலம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  
vote
அந்த வகையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையடுத்து ஏராளமான வாக்காளர்கள் தங்கள் வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். 
post
இந்நிலையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வில் இருக்கும் தேனி மாவட்டம் கூடலூர், சசிகுமார் என்பவரின் வாக்கை  அவருக்கே தெரியாமல் தபால் வாக்கு மூலம் போடப்பட்டுள்ளது.  எல்லை பாதுகாப்புப் பணியில் பணியாற்றி வந்த சசிகுமார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.இன்று தேர்தல் நாள் என்பதால்,  கூடலூரில் உள்ள கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 266 சாவடியில் ஓட்டுப் போடுவதற்காகச் சென்றுள்ளார். ஆனால் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியிலிருந்த அதிகாரிகள் அவர் ஓட்டு ஏற்கனவே  தபால் வாக்கு மூலம் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் அவர் ஓட்டுப் போட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது போன்று பல்வேறு இடங்களில் தபால் வாக்கில் முறைகேடு நடைபெற்று வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகளின் குரல் ஒலித்து  வருவது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.