பிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி!!

சாலை விபத்தில் சின்னதிரை நடிகைகள் இருவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


actress
தெலுங்கானா மாநிலம் விகாராபாத்மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி காட்டுப்பகுதியில்  சின்னதிரை தொடர்க்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் நடிகைகளான பார்கவி மற்றும் அனுஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஷூட்டிங், கடந்த திங்கட்கிழமை அன்று பார்கவி மற்றும் அனுஷாஆகியோர் ஹைதராபாத்துக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.  காரை சக்ரி ஓட்ட வினய் குமார் என்பவரும் உடன் வந்துள்ளார். 
https://www.tamilarul.net/
இந்நிலையில் அப்பாரெட்டி குடா என்ற என்ற பகுதியில்  கார் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையிலிருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. அப்போது ஓட்டுநர் லாரியில் மோதாமல் இருக்க காரை திரும்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
bahrgavi
இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்ற மூவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஐதராபாத் உஸ்மானியா மருத்துவ மனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, நடிகை  அனுஷா சிகிச்சை மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Powered by Blogger.