பெரியார் மட்டும்தான் பெண் விடுதலைக்குப் போராடினாரா?''-சீமான் கேள்வி!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இடஒதிக்கீடு கொடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது இக்கட்சிக்கு, விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்து தமிழகம் முழுதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.தமிழகத்தில் நீங்கள் தனித்து நிற்பதால், வாக்குகள் பிரிந்து மீண்டும் பா.ஜ.க வருவதற்கு வழிவகை செய்யும் செய்யுமே?''
''அப்படிச் சொல்லமுடியாது.இந்த திராவிடக் கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பார்கள் என்று நம்பியிருக்க முடியாது. இரண்டு திராவிடக் கட்சிகளுமே தமிழகத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது.  தி.மு.க தான் பாஜக-வை எதிர்க்க வேண்டும் என்றில்லை. நானும் இந்துக்கட்சி என்று சொல்லிக்கொண்டு, சமரசம் செய்கிறது தி.மு.க. நான் பா.ஜ.கவை எதிர்ப்பேன். அதனால் என்னை நம்பித்தான் தேர்தலில் நிற்க முடியும்''.

''இந்த நாடாளுமன்ற தேர்தலில், உங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறும்பட்சத்தில் மத்தியில் யாரை ஆதரிப்பீர்கள்''?
''காங்கிரஸ், பி.ஜே.பி மட்டும் தான் இந்தியாவை ஆள வேண்டுமா. மாநிலக் கட்சிகள் மத்தியில் கோலோச்சட்டும். மம்தா பானர்ஜி,மாயாவதி, அகிலேஷ்யாதவ், பவன் கல்யான், பிரகாஷ்ராஜ் என்று எங்களைப்போல் மாநிலத்தில் இருந்து மத்தியில் சென்று ஒரு ஆட்சியைக் கொடுக்கட்டுமே. அதுதான் சிறந்த ஆட்சியாக இருக்கும். இந்தியாவுக்கு என்று ஒரு கட்சித் தேவையில்லை. மாநிலக் கட்சிகள் தேர்வு செய்த வி.பி.சிங் தான் இப்போதுவரை சிறந்தபிரதமராக இருக்கிறார். அப்படி ஒருவர் வரட்டுமே.

மோடி, ராகுலைத் தவிர இந்தியாவை ஆள வேறு ஆள் இல்லையா என்ன?''


''திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் நீங்கள், அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை ஒருபோதும் விமர்சிப்பதில்லையே..?''
''பெரிய ரவுடி கூட தான் சண்டை செய்யணும். நாங்கள் தனித்து பத்து சதவிகிதத்துக்கும் மேல் வாக்கு வாங்கும்போது, அண்ணன் திருமா தி.மு.க-வுடன் செல்ல வேண்டியத் தேவை இருக்காது.  வி.சி.க மற்றும் பா.ம.க வேறு வழி இல்லாததால் தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. அதை விமர்சிக்க வேண்டியத் தேவையில்லை''.

''கருணாநிதி, ஜெயலலிதா மீது நீங்கள் வெளிப்படையாக விமர்சனம் வைக்கிறீர்கள். அதேபோல், பெரியார் மற்றும் அண்ணா  மீதும் விமர்சனம் வைக்கிறீர்களே?
''பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை; இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெரிந்த மண் இது. இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா. சாதி ஒழிப்புக்கு எதிராகப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்''.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.