யேர்மனி டோட்மூண்ட் நகரில் Tamil swag (தமிழ்சுவைக்) நிகழ்வு !!

நிகழ்விற்கு எந்த நபரும் விருந்தினராக அழைக்கப்படவில்லை. மங்கல விளக்கேற்றல் இல்லை. எந்தவிதமான பேச்சு நிகழ்வுகளும் இல்லை. நிகழ்வின் நேரம் 3 மணித்தியாலங்களே. நிகழ்வில் நடனம், பாடல், கடும்குரல் பாடல், ஆடல் மட்டுமே அமையப்பெற்றது. ஆனாலும் அத்தனை நிகழ்வுகளும் அருமையே. நிகழ்வில் நடனமாடிய சுருதியின் நடனம் மிக அருமை. அனைத்து முகபாவனையும் நடனத்தில் காட்டியமை சிறப்பே. இருப்பினும் நிகழ்விற்கு ஊடகம் சார்ந்த சில நபர்கள் ,எழுத்தாளர்கள் , எமது நகரத்தில் வாழக்கூடிய பலர் வருகை தரவில்லை. காரணம் அதிதிகளாக அழைத்திருப்பின் வருகை தந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனாலும் நிகழ்வை நேரம் கணித்து ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்திற்கு நிறைவு செய்த விழாகுழு பாராட்ட வேண்டியவர்களே.
நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கிய திரு.தர்மா மற்றும் திருமதி.சகானா ஆகியோர் நகைச்சுவையுடன் தொகுந்து வழங்கியமை சிறப்பே.
.
கி.த.தர்மாமகன்.
.யேர்மனி.
கருத்துகள் இல்லை