சம்மாந்துறையில் பாரிய சுற்றிவளைப்பு!

சம்மாந்துறை பிரதேசத்தில் இன்றையதினம் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மற்றுமொரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி, 4 செயலிழந்த கைத்தொலைபேசிகள், ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 27, மான் கொம்பில் தயாரிக்கப்பட்ட கூரான உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அப்பகுதியில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் பொலித்தீன் ஒன்றினால் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தன.

எந்த சந்தேக நபர்களும் இச்சுற்றிவளைப்பில் கைதாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.