கோமா நிலையில் இருந்து கண் விழித்த கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

புற்றுநோய் காரணமாக கோமா நிலைக்கு சென்ற நபருக்கு நினைவு திரும்பிய நிலையில் தனது மனைவி, மகளை அவர் மறந்துவிட்டதோடு உணவு சாப்பிடும் முறையை கூட மறந்துள்ளார்.


வேல்ஸை சேர்ந்தவர் நீல் ஆம்பீர் (51). இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் தனது வீட்டில் ஷேவிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் காது அருகில் கட்டி ஒன்று தோன்றியதை நீல் பார்த்தார்.

இதையடுத்து மருத்துவரிடம் சென்று பார்த்தபோது காதுகளில் ஏற்பட்ட கிருமி தொற்றால் இந்த கட்டி வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அந்த கட்டி பெரிதாகி கொண்டே போன நிலையில் நீலுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அப்போது தான் அவருக்கு non-Hodgkin lymphoma ரக புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான சிகிச்சையின் போதே நீல் கோமா நிலைக்கு சென்றார்.

நீல் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக 21 நாட்கள் கோமா நிலைக்கு பின்னர் நீலுக்கு சுயநினைவு திரும்பியது.

அப்போது நீலின் மனைவி ஹேலே மற்றும் 15 வயது மகள் மேகன் மருத்துவமனையில் இருந்தனர். நீல் கண்விழித்த போது எதிரில் இருந்த ஹேலே மற்றும் மேகன் யார் என்றே அவருக்கு தெரியவில்லை.

இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தொடர்ந்து நீலுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு 109 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.