மூன்று கண்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாம்பு!

மூன்று கண்களுடன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடக்கு அவுஸ்ரேலியாவின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றிலேயே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாம்பின் தலைக்கு மேல் உள்ள மூன்றாவது கண், அதன் உடலில் இயற்கையாக நடந்த மரபணு மாற்றத்தால் ஏற்பட்டதுபோல் தெரிவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டார்வின் நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் ‘Monty Python’ என செல்லமாக அழைக்கப்படும் குறித்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

40 செண்டிமீட்டர் நீளமுள்ள Monty, அதன் உடற்குறைபாடு காரணமாக உணவு உட்கொள்வதில் சிரமப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.