வடக்கில் இராணுவ பாதுகாப்பு தொடர்பில் மாவை!!

நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களை அடுத்து வடக்கில் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்துமாறு நான் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


வடக்கு, கிழக்கில் இலங்கை படையினர் நிலைமைகளைக் கையாள்வது திருப்தி அளிக்கவில்லையா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள, இந்த தாக்குதல்களில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதால், வடக்கு கிழக்கில் உள்ள மக்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அனைத்துலக புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வர முடியும் என்றே நான் கூறியிருந்தேன்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற பல நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்காக தமது புலனாய்வுப் பிரிவுகளை உதவிக்கு அனுப்ப விருப்பம் வெளியிட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.