வவுனியாவில் ரி56 ரக துப்பாக்கியின் மகசீனுடன் தோட்டாக்கள் மீட்பு!!

வவுனியா, மடுகந்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் மீட்டுகப்பட்டுள்ளன.


குளத்திற்கு அருகில் காணப்பட்ட பொருட்களை அப்பகுதியினர் அவதானித்ததையடுத்து விமானப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் ரி56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் மகசீன் மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் வெடிப்பொருட்களைத் தேடியுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான வேறு எவ்விதமான பொருட்களும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.