வழி தவறி ஏரிக்குள் பாய்ந்த போயிங் விமானம்!

 பேருந்துகள் வழிதவறி சாலையோர மரங்களில் மோதி விபத்துக்குள்ளாவது போல அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் போயிங் விமானம் ஒன்று ஏரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.


கியூபாவில் கன்டனமோ பே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 737 தனியார் விமானம், ஃப்ளோரிடா மாகாணம் ஜேக்சன்வில்லி விமான நிலையத்தில் இரவு 9.40 மணியளவில் தரையிறங்கியிருக்கிறது. இரவு நேரத்தில் அங்குள்ள ரன்வேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது வழிதவறி அருகிலுள்ள செயின்ட் ஜான்ஸ் ஏரிக்குள் விமானம் புகுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானப்பயணிகள் 21 பேர் வரை காயமடைந்தனர். காயம் எதுவும் பயப்படும்படியாக இல்லையென்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஜேக்சன்வில்லி ஷெரீப் அலுவலகத்தின் அறிக்கையில், காவல்துறை தனது அறிக்கையில், ரன்வேயில் வழிதவறிய போயிங் 737 விமானம் முழுமையாக ஏரிக்குள் மூழ்கவில்லை. எனவே அதில் பயணித்த விமானப் பயணிகள் 136 பேரும், பணியாளர்கள் 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009ல் அவசர காலத்திற்கு தரையிறங்குவதற்காக ஹட்சன் ஏரிக்குள் ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.