குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்டவையா?

கல்குவாரிகள் தொடர்பில் சட்ட ரீதியாக விநியோகிக்கப்படும்  வெடி மருந்துகள், முறையற்ற விதத்தில்  மூன்றாம் தரப்பினரின் கைகளுக்கு  கிடைத்துள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவ்வாறு விநியோகிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதக பாரிய சந்தேகம் நிலவுவதாக  கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா தெரிவித்தார்.

அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு இவ்வாரு விநியோகிக்கப்பட்ட வெடி பொருட்களில் ஒரு தொகை தவறான வழியில் பயங்கரவாதிகளின் கைகளுக்கு கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து நாட்டில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளின் போது,  வோட்டர் ஜெல், டெட்டனேடர்,  சேப்ட் பியூஸ்,  போன்ற வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை  அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு  வெலிசரை கடற்படை முகாம் ஊடாக  விநியோகிக்கப்பட்டவை என்பது  தெரியவந்துள்ளதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News #Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Vavuniya  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo   #Vice-Atmiral-Biyel.De-Silva
Powered by Blogger.