மதூஷ் CID தலைமையகத்தில் ஒப்படைப்பு!
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.
நாடுகடத்தப்பட்டார் மதூஷ் – CID பொறுப்பேற்பு
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குற்ற புலனாய்வு அதிகாரிகளினால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை டுபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
மாகந்துரே மதூஷின் மீது 10 கொலைகள், 3 கொலை முயற்சி, 3 திருட்டு குற்றச்சாட்டு ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு குற்றச்சாட்டுக்கள் மற்றும் 18 கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை நீதிமன்றங்களினால் 4 பிடியாணை உத்தரவு, சிவப்பு எச்சரிக்கை உத்தரவு என்பன பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மதூஷின் மீது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் நாட்டிலிருந்து தப்பிச்சென்று டுபாயில் வாழ்ந்த மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர், கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி போதைப்பொருளுடன் ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டனர். இதன்போது மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட 30 பேர் ஏற்கனவே நாட்டிற்கு திருப்பியனுப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு, வௌிவிவகார அமைச்சினூடாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இது குறித்த வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ய வௌிவிவகார அமைச்சர் அன்வார் பின் மொஹமட் கர்காஷ் ஆகியோருக்கு இடையில் அபுதாவியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது மாகந்துரே மதூஷ் மீதான குற்றவியல் வழக்கு இலங்கையில் இருப்பதாகவும் எனவே அவரை நாடுகடந்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இதேவேளை பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின், டுபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே அவர் இன்று நாடுகடத்தப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை