126 மணிநேரம் நடனம் - கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்!!

நேபாள நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொடர்ந்து 126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.


நேபாள நாட்டின் கிழக்கே தன்குடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பந்தனா நேபாள். 18 வயதுடைய இந்த இளம்பெண் கின்னஸ் தொடர்ந்து 126 மணிநேரம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுவும் தனிநபராக  ஆடி இந்த சாதனைப்புரிந்துள்ளார். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் தொடர்ந்து  123 மணி நேரம் 15 நிமிடங்களாக ஆடியது முந்தைய சாதனையாக இருந்தது. இதனை தற்போது பந்தனா முறியடித்துள்ளார். இதனை ஆய்வு செய்த கின்னஸ் பிரதிநிதிகள் தங்களது முடிவைக் கடந்த வெள்ளிக்கிழகை அன்றே தெரிவித்து விட்டனர். நேற்று கின்னஸ் சாதனைக்காக அங்கீகார பத்திரத்தை பன்தனாவிடம் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி  தனது இல்லத்திற்கு இவரை நேரில் அழைத்து கௌரவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.