இந்திய நகரங்களைக் குறிவைத்த வங்கதேச கொள்ளையர்கள் !!

இந்திய நகரங்களைக் குறிவைத்து விமானத்தில் வந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வங்கதேச கொள்ளையர்கள் 3 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.


இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, ஆக்ரா, லக்னொ, புவனேஷ்வர் ஆகிய பகுதியில் நள்ளிரவில் ஒரு கும்பலை வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதாக வழக்குப்பதிவானது. 5-க்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து  வீட்டில் இருந்த உறுப்பினர்களைக் கட்டிப்போட்டு விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  5 சம்பவங்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தால் அனைத்து மாநில காவல்துறையினருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 2015-ல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த கொள்ளையர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். எனவே வங்கதேச கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்குமோ எனக் காவல்துறை சந்தேகித்தனர். இதனையடுத்து பழைய வழக்குகளில் கைதான நபர்களைக் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் இருந்த காமல் என்ற கொள்ளையன் கம்ருல் காமல் (Kamrul kamaal) 2017-ஆண்டில் இருந்த இந்தியாவுக்கு 8 முறை வந்து சென்றதை காவல்துறையினர் மோப்பம் பிடித்தனர். டெல்லி விமானநிலையத்தில் இவர் பலமுறை வந்ததற்கான பதிவுகளும் இருந்துள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் சுற்றித்திரிந்த கம்ருல் காமல் மற்றும் அவனது கூட்டாளிகளை இருவரைச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், “ சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் நடைபெற்ற கொள்ளை குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் நடந்த சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருந்தது ஆனால் அவை அனைத்தும் பல்வேறு மாநிலங்களில் கால இடைவெளியில் நடந்து இருந்தது.  6-லிருந்து 8 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கும்பலானது ஜன்னல் கம்பிகளை வெட்டி வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுற்றித்திரியும் வங்கதேச கும்பலின் நடவடிக்கைகள் கண்காணிப்பட்டு வருகிறது. இந்த கொள்ளையில் கம்ருல் காமல் தான் மூளையாக செயல்பட்டுள்ளான். டெல்லியில் வைத்து காமல் மற்றும் அவனது கூட்டாளிகளான இஸ்லாம், நஷ்ரூல் அகிய இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கம்ருல் மற்றும் இஸ்லாம் இருவரும் தங்களது பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். நஷ்ருல் இந்தியாவிற்குள் வங்கதேச எல்லை வழியாக அத்துமீறி வந்துள்ளார். பாஸ்போர்ட் பதிவின் படி காமல் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 8 முறை இந்தியாவிற்குள் வருகை புரிந்துள்ளார். இஸ்லாம் மூன்று முறை வந்துள்ளார். நஷ்ருல் தரகருக்கு 5000 ரூபாய் கொடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். கொள்ளையடித்த இடத்தில் இவர்களால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.  இவர்கள் ரயில் நிலையங்கள் மற்றும் வனப்பகுதியில் தங்கியிருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.  கொள்ளையடித்த பின்னர் இவர்கள் இருவரும் விமானத்தில் வங்கதேசம் சென்றுவிடுகின்றனர். நஸ்ரூல் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் கள்ளத்தனமாக எல்லையை தாண்டி வங்கதேசம் சென்றுவிடுகிறார். இதன்பின்னர் அங்குச்சென்று தங்களது பங்குகளை பிரித்து வந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.