சஹரான் ஹாசிம் கடல்வழியாக சென்றாரா?

இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவே தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருக்க வேண்டுமென இலங்கை இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மகேஸ் சேனநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“சஹரான் ஹாசிம் இந்தியாவுக்கு விமானம் ஊடாக பயணம் மேற்கொண்டமைக்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகையால் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக சஹ்ரான் பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

இதேவேளை இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இவ்விடயம்  குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெங்களூர், காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சஹரான் சென்றிருக்கலாமென கூறப்படுகின்றது.

இதன்போது அங்கிருந்த அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கும் அவர் முயற்சி மேற்கொண்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் கடுமையான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.