ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!


கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயிற்சி இடமாகவும் சந்தேகிக்கப்படும் சுமார் 40 ஏக்கர் அளவிலான பயிற்சி முகாமே ஓட்டமாவடியில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியில் 10 ஏக்கர் அளவிலான ஐ.எஸ். முகாம் ஒன்று நேற்று அதிகாலை முற்றுகையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.