பூமியின் நிலை குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கையின் தற்போதைய நிலை ஆகியவை தொடர்பாக ஐ.நா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பெரும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ள அந்த அறிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சுமார் பத்து லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் இதற்கு மனிதர்கள் மட்டுமே காரணம் எனவும் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் என்ற அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித வரலாற்றில் இல்லாத அளவு பெரும் பாதிப்பு இது என்றும் இதனால் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தைச் சந்திக்க வேண்டிய நிலை வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இயற்கையின் நிலை அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, `உலகம் முழுவதும் சுமார் பத்து லட்சம் உயிரினங்கள் வாழ முடியாமல் தவித்து வருகிறது. கடந்த பத்து வருடத்தில் மட்டும் பல உயிரினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. ஒரு கோடி ஆண்டுகளில் உயிரினங்களின் அழிவு நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடல் வாழ் உயிரினங்கள்தான் உச்சக்கட்ட ஆபத்தில் உள்ளன. 40 சதவிகிதத்துக்கும் அதிகமான நீர் மற்றும் நில வாழ் உயிரினங்களும், நான்கில் மூன்று பங்கு நீர் வாழ் பாலூட்டிகளும் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. சொந்த இடத்தில் வளரும் தாவரங்கள் தங்களின் இயல்பை இழந்துவிட்டன. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது. ( உதாரணம் : மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் சில தாவரங்கள் தற்போது அங்கும் வளர்வதில்லை). இயற்கை மற்றும் காலநிலை மாற்றங்களையும் தாண்டி மனிதர்களால் மற்ற கிரகங்களும் பாதிக்கப்படுகின்றன.

நிலப்பரப்பில் வாழும் 23 சதவிகிதம் உயிரினங்களும், தேனீகள் போன்றவையும், கடல் ஓரங்களில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்கு மீன்கள் கடலிலிருந்து அறுவடை செய்யப்பட்டுள்ளன. இது தற்போது 60 சதவிகிதம் உச்சத்தில் உள்ளது. மாசு, தூய்மைக் கேடு ஆகியவை இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். 1992-ம் ஆண்டுக்குப் பிறகு நகரங்கள் இரண்டு மடங்கு அதிக மாசுபட்டுள்ளன. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் பிளாஸ்டி பயன்பாடு பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு வருடத்துக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது’ என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நிலையான நடைமுறைகளை வளர்ப்பதற்கும், தொலைந்துபோன சிலவற்றையும் மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வளர்ச்சி, உருமாற்றம் ஆகியவையும் இயற்கை அழிவுக்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் காலநிலை மாற்றத்தை மிகப்பெரும் கவலையாகக் கருதி அதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் வரும் காலத்தில் உயிரினங்களே வாழ முடியாத இடமாகப் புவி மாறும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.