இந்தியா பயங்கரவாதத்தை ஒழிக்க வியூகம் வகுக்கிறது!!

இந்தியாவை முழுமையாக கண்காணிப்பதற்கும், எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை உடனுக்குடன் கண்டிபிடிக்கும் வகையிலும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளதாக  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


குறித்த செயற்கைகோள் எதிர்வரும் 22ஆம் திகதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ரிசாட்-2 பி.ஆர்.1 என பெயரிட்டுள்ள இந்த செயற்கைகோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை ஒளிப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகள் மற்றும் கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்நுழைவதை தடுக்கவும் குறித்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.