புகைப்பட கலை பற்றி நெகிழ்ச்சியோடு பகிர்கிறார் நடிகர் வெங்கட் மனைவி அஜந்தா!

சின்னத்திரையின் நட்சத்திர தம்பதி அமித் பார்க் - ஶ்ரீரஞ்சனி. ஶ்ரீரஞ்சனியின் கர்ப்பகால தருணங்களை புகைப்படம் எடுத்தவரும் ஒருவகையில் பிரபலமே. ஆம், அவர் பெயர் அஜந்தா. குழந்தைகளுக்கான புகைப்படக்காரர். `பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடிக்கும் நடிகர் வெங்கட்டின் மனைவி.


நான் விஸ்காம் படிச்சிருக்கேன். ஸோ... கேமரா காதல்ங்கிறது இயல்பாவே எனக்குள்ள ஊத்தெடுக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல கேமரா வாங்கின எல்லாரையும் மாதிரி பார்க்கிறதை எல்லாம் போட்டோ எடுத்துத் தள்ள ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் காதல் ஒரு நிதானத்துக்கு வந்து ரசனையா எப்படி எடுக்கிறதுங்கிறதை தெரிஞ்சுகிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு வெடிங் போட்டோகிராபி பண்ணினேன். வெடிங் போட்டோகிராபி பண்ணும்போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாம எவ்வளவு சூப்பரா புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தாலும் இவங்க பொண்ணு தானேங்குற எண்ணம் எல்லோருக்குள்ளேயும் இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சிட்டு புகைப்படங்கள் எடுத்துட்டு இருந்தேன். பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் அவளை பார்த்துட்டு வெடிங் போட்டோகிராபி எடுக்கிறது பெரிய வேலையா இருந்தது. அதனால அதை கைவிட்டுட்டு பாப்பாவை மட்டும் கவனிக்க ஆரம்பிச்சேன்'' என்றவர் தன்னுடைய ஃபேமிலி குறித்துப் பேச ஆரம்பித்தார்.

எங்க வீட்டுல நான், என் கணவர், எங்க பொண்ணு தேஜஸ்வினி மட்டும்தான். கணவர் மீடியாவில் இருக்கிறார் என்பதால அடிக்கடி ஷூட் போக வேண்டியிருக்கும். தனியாளா என்னால பாப்பாவைப் பார்க்கிறது ரொம்ப சிரமமா இருந்தது. ஆரம்பத்தில் என் கணவர் எங்க கூட நேரம் செலவழிக்க மாட்டேங்குறார்ன்னு ரொம்பவே சண்டை போட்டிருக்கேன். அதற்கு அப்புறம் அவருடைய சூழலைப் புரிஞ்சுகிட்டேன். கரியர்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். கோயம்புத்தூரில் என் அம்மா வீடு இருக்கு. என் கரியரை அங்க ஸ்டார்ட் பண்ணினா அம்மா பாப்பாவைப் பார்த்துப்பாங்க... நான் என் கரியரை பார்த்துப்பேன்ங்கிற நம்பிக்கையில கோயம்புத்தூர்க்கு நானும் பொண்ணும் டிராவல் ஆனோம். அங்கேயே ஒரு ஸ்டூடியோ ஓப்பன் பண்ணிட்டேன்.

எனக்கு பேபி போட்டோஷுட் ரொம்பவே கம்ஃபர்டபுள்னு தோணுச்சு. நிறைய பேர் பேபி போட்டோகிராபி எடுக்குறாங்க. அதுல நான் வித்தியாசமா தெரிய என்னாலான அத்தனை முயற்சியையும் மேற்கொண்டேன். நான் பண்ற ஒர்க் பலருக்கும் பிடிச்சிருந்தது. தொடர்ந்து நிறைய ஃபோட்டோ ஷுட் ஆர்டரும் வந்துச்சு.


பிறந்த குழந்தைகளுக்கு சின்னதா மினியேச்சர் வைச்சு ஃபோட்டோஷூட் எடுப்பேன். ஒரு ஃபோட்டோஷூட்டுக்குப் போகிறதுக்கு முன்னாடி என்ன மாதிரி ஷூட் பண்ணப் போகிறோம். அவங்க என்ன கலர் டிரெஸ் போடப் போறாங்க. என்ன டிரெஸ் போடுறாங்கன்னு எல்லாத்தையும் முடிவு பண்ணிடுவேன். அதை பிளான் பண்ணாம ஷுட்டுக்குப் போக மாட்டேன். கர்ப்பகால புகைப்படங்கள் (maternity photoshoot) பொறுத்தவரைக்கும் டிரெஸ் ரொம்பவே முக்கியம் என்றவரிடம் மறக்க முடியாத ஃபோட்டோஷூட் குறித்துக் கேட்டோம்.

எல்லா ஷூட்டுமே எனக்கு ஸ்பெஷல்தான். குழந்தைகளை போட்டோ எடுக்கும் போது மனசு ரொம்பவே ஹாப்பியா இருக்கும். ஒவ்வொரு குழந்தையையும் ரசிச்சு, ரசிச்சு ஃபோட்டோஸ் எடுக்குறது செம அனுபவமா இருக்கும். தூங்குற குழந்தைகளுக்கு டிரஸ், மினியேச்சரெல்லாம் செட் பண்ணிட்டு அவங்க முழிக்கிறதுக்குள்ள ஃபோட்டோ எடுக்கணும் என்றவர் தன்னுடைய மகள் செய்யும் குறும்புத்தனம் பற்றிப் பகிர்ந்தார்.

என் பொண்ணு ரொம்பவே குறும்பு பண்ணுவா. அவளை வைச்சுகிட்டு ஷூட் பண்றதே எனக்கு மிகப்பெரிய சவால். நான் மத்த குழந்தைகளை தூக்கிக் கொஞ்சி போஸ் சொல்லும் போது அவ கொஞ்சம் செல்லமா கோபப்படுவா. அவளுடைய கிளிப், கம்மல்ன்னு எதையாவது பேபிக்கு யூஸ் பண்ணினா உம்முன்னு பார்த்துட்டே இருப்பா. மத்த குழந்தைகளை போட்டோ எடுக்கும்போது கூட நான் சோர்வடையலிங்க. என் பொண்ணை ஃபோட்டோஷுட் பண்றப்போ பயங்கர டயர்டாகிட்டேன்'' என்றவர் அமித் பார்கவ் புகைப்பட தருணம் பற்றிப் பேசினார்.


ஶ்ரீரஞ்சனி கர்ப்பமா இருக்காங்கனு தெரிஞ்சதும் மெட்டர்னிட்டி போட்டோகிராபி பண்ணலாமே. நாம டிரை பண்ணுவோமானு அவங்ககிட்ட கேட்டேன். ஓ யெஸ்னு சொன்னதும் வொர்க் ஆரம்பிச்சுட்டோம். டிரஸ், பிளேஸ்னு எல்லாத்தையும் தீர்மானிச்சோம். அழகான ஒத்துழைப்பு கொடுக்க அட்டகாசமா முடிஞ்சது ஶ்ரீரஞ்சனி அமித் பார்கவ் ஷுட். இப்போதைக்கு சென்னை, கோயம்புத்தூர்ன்னு மாறி, மாறி ஃபோட்டோஷூட் பண்ணிட்டு இருக்கேன். என் கணவர் ஷுட் இல்லாதப்போ எங்களைப் பார்க்க வருவார். பாப்பா யூகேஜி படிக்கிறாங்க. இப்போ நானும் சரி, என் கணவரும் சரி எங்களுடைய கரியர்ல கவனம் செலுத்துறோம். சீக்கிரமே சென்னையில் ஒரு ஸ்டூடியோ ஓப்பன் பண்ணணும்'' என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.