மீண்டும் களமிறங்கும் பி.எச்.அப்துல் ஹமீட்!!

கு’ குறில். இந்த எழுத்திலே மணி ஒலித்திருக்கிறது. ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் உங்களது அபிமான பாடலை நீங்கள் பாடலாம்..’ - தனியார் சேட்டிலைட் சேனல் தமிழில் அறிமுகமான புதிதில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இந்த அறிவிப்புச் சத்தம் கேட்காத வீடுகளே இருக்காது.
`உங்களது அன்பு அறிவிப்பாளர்’ என்கிற கணீர் குரலோடு ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பார் பி.எச்.அப்துல் ஹமீது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இவரை அழைத்தன. ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறைப் பிரபலங்களையும் பல்வேறு சேனல்களுக்காக இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். தொடர்ந்து `கன்னத்தில் முத்தமிட்டால்’, `தெனாலி’ ஆகிய படங்களில் தலைகாட்டியவரை, அதன் பிறகு டிவி பக்கம் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. கலை, இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொருட்டு உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணித்தபடியே இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ச் சேனலில் அதுவும் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவரது கணீர் குரலைக் கேட்கிற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. ஜீ தமிழ் சேனலில் இம்மாதம் 18-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கும் `சரிகமப’ சீனியர் சீசன் -2 ல் கலந்துகொள்ள இருக்கிறார் இவர். போட்டியாளர்களின் குரல் உச்சரிப்பைத் திருத்திச் சரி செய்வதற்காகவே இவரைக் கூட்டி வருகிறார்களாம். நேற்றைய தினம் இந்தத் தகவலை வெளியிட்டது சேனல். `சரிகமப’ ஷோவின் தூதுவராக யுவன் ஷங்கர் ராஜா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.