பின்லேடனின் கடைசி மணித்துளிகள்!! மனம் திறந்த மனைவி!!

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 2011 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற அன்றைய நான் என்ன நடந்து என்பது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் ஒசாமாவின் மனைவி அமால்.


ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால் ஆவார்.

ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் ஆஃப் 9/11 மாஸ்டர்மைண்ட்ஸ் லைஃப் புத்தகத்திற்காக, அமால் அவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

"சண்டே டைம்ஸ் யூ.கே" -இல் இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி இரவு உணவு முடித்து தொழுகைக்கு பின்னர் ஒசாமா மேல் மாடியில் உள்ள படுக்கையறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அப்போது 11 மணி இருக்கும்.

திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. வழக்கமாக நடக்கும் மின்சார தடை என்பதால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நள்ளிரவு நேரம் எனது மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டு எனது தூக்கம் கலைந்து எழுந்தேன். அப்போது ஏதோ சப்தம் கேட்டு யாரோ மாடிப்படியில் ஏறி செல்வது போன்று இருந்தது. மின்சாரம் இல்லாத காரணத்தால் அந்த இருளிலும் எங்களை கடந்து நிழல்கள் சென்றதை என்னால் உறுதி செய்ய முடிந்தது.

நான் இவற்றை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தபோது, நித்திரையில் இருந்த ஒசாமாவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். அவரது முகத்தில் அச்சம் நிலவி என்னை பிடித்துக்கொண்டார்.

எங்களை உற்றுப்பார்த்த ஆட்கள், மேலே ஓடுவதையும் அறிந்துகொண்ட பின்னர் நாங்கள் இருவரும் ங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம்.

பால்கனியை ஒட்டியிருந்த கதவின் வழியாக பார்த்தபோது அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தது, சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகொப்டரும் வந்துவிட்டது.

எங்களுக்கு யாரோ துரோம் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். ல ஆண்டுகளாக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப்பொறியாக மாறிவிட்டது.

அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல என்று எங்களிடம் தெரிவித்த ஒசாமா, நீங்கள் அனைவரும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுங்கள் என கூறினார்.இருப்பினும் நானும் எனது மகன் ஹுசைனும் அவருடன் இருந்தோம்.

வீட்டைச் சுற்றி வளைத்தவர்கள் பால்கனிக்குள் வந்துவிட்டார்கள். சப்தங்கள் அதிகமாயின, ஒரு கட்டத்தில் வீடே அதிர தொடங்கியது.

எல்லோரும் அமர்ந்து தொழுகை செய்தோம், அன்றைய தொழுகை ஒசாமாவின் கடைசி தொழுகையாக மாறிவிட்டது. எங்கள் இருப்பிடத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் யாரோ அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டார்கள், யாரோ எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள், இல்லையென்றால் இது என்றுமே சாத்தியமாகியிருக்காது.

அமெரிக்க இராணுவத்தினர் எங்கள் வீட்டை சுற்றி வளைத்து வீட்டின் மேல் மாடிக்குள் நுழைந்துவிட்டார்கள், குழந்தைகள் அழத்தொடங்கின, சில நிமிடங்களில் அனைத்து நடந்துமுடிந்துவிட்டது என கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.