கைதாகிய மாணவர் தொடர்பில் யாழ் கட்டளைத்தளபதி உறுதி!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கும், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே மேற்படி சோதனை நடவடிக்கை யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.