சீசன் 2வைத் தொடும் விஷால் நிகழ்ச்சி!!

கடந்த வருடம் அக்டோபர் 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது `சன் நாம் ஒருவர்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஷால் இருந்தார்.
கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், பார்த்திபன், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழ்மையில் இருப்பவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு தங்களால் ஆன உதவியைச் செய்வதாக உறுதியளித்தனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏழ்மையில் வாடும் பல குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி 15 அத்தியாயங்களை தொட்டவுடன் ஜனவரி 13ம் தேதியுடன் நிறைவு பெற்றிருந்தது. தற்போது `சன் நாம் ஒருவர்' நிகழ்ச்சிக்கான இரண்டாவது சீசன் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்து சன் நாம் ஒருவர் இயக்குநர் தரப்பிலிருந்து கார்த்திக் மாடசாமி என்பவர் கூறியதாவது, ``முன்பு கஷ்டப்பட்ட ஃபேமிலிக்கான உதவிகளை பிரபலங்கள் செய்து வந்தார்கள். இந்த இரண்டாவது சீசனைப் பொறுத்தவரை மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த பல பேருக்குப் படகு வாங்கக்கூடக் காசில்லாமல், வாடகைக்கு எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது, வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்கான நிகழ்ச்சியாக இது இருக்கும்.

இப்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு படிப்பு, திருமண உதவிகள் போன்ற உதவிகள் கிடைக்காமல் இருக்கும். தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களில் உதவிக்காகக் காத்திருக்கும் கஷ்டப்படும் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்வது போன்ற விஷயங்களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வெளிகொண்டுவரவிருக்கிறோம். எப்போதும்போல பிரபலங்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்' என்றார்.

`சன் நாம் ஒருவர்' நிகழ்ச்சியைத் தெலுங்கில் லட்சுமி மஞ்சு என்பவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.