பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம்! ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் !இதுதான் இலங்கை அரசின் நியாயம்??

பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு.“பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார்.

1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீராவை பயங்கரவாதி என்று இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அப்போது விஜயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் “ரோகன விஜயவீரா பயங்கரவாதி எனவே அவரது பிள்ளைகளும் பயங்கரவாதி” என்று ஒரு பிள்ளைகூட சுட்டுக் கொல்லப்படவில்லை.

மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய அனைத்து செலவுகளும் அரசே பொறுப்பேற்றது.


விஜயவீராவின் மகன் உபுன்டு விஜயவீரா  படித்து பட்டம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்ல தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.

ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.

விஜயவீராவின் ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய இலங்கை அரசு பிரபாகரனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுள்ளது.

இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?

இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
Powered by Blogger.