நாட்டிற்குள் வேறு மொழி வேண்டாம்!! ரவி கருணாநாயக்க!!

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக வேறு மொழி நாட்டிற்குள் இருக்குமாயின் அது கேலிக்குரியது எனவும், அந்த கேலியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஸ்ரீடி உபபோலவில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பல வருடங்களாக நடைபெற்ற பெரிய போரை முடிவுக்கு கொண்டு வந்த திறமையான படைத்தளபதியான சரத் பொன்சேகாவின் அந்த திறமையை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் மீண்டும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதற்கு இன்னும் ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. நாட்டின் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ வேண்டும். எவரும் அச்சத்துடன் வாழக் கூடாது.

நாட்டில் வாழும் அனைவருக்கும் நாட்டில் சகல இடங்களிலும் உரிமை உள்ளது. இதற்கான பாதுகாப்பை வழங்குவது என்பது அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை.

அதேபோல் நாம் அனைவரும் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பை தற்காத்து கொள்ள வேண்டும்.

நாட்டில் இரண்டு பிரதான மொழிகளே இருக்கின்றன. அது சிங்களமும், தமிழும். ஆங்கிலத்தை நாங்கள் தொடர்பு மொழியாக பயன்படுத்துகிறோம்.

இந்த இரண்டு மொழிகளை விடுத்து நாட்டில் பல இடங்களில் பல மொழிகள் இருப்பதாக அறிய கிடைத்துள்ளது.

இந்த நிலைமை கேலிக்குரியது. அந்த கேலியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.