தெற்கு ஆசியாவின் பெரிய மசூதியில் குண்டு வெடிப்பு!!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ளது தெற்கு ஆசியாவின் மிகப்பெரும் மசூதி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மசூதி வரலாற்றுப் புகழ் பெற்றது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை நடத்தும் அளவுக்கு மிகவும் பெரியது. இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு நேற்று முதல் தொடங்கியது.

அதன்படி இன்று காலை அனைத்து இஸ்லாமிய மக்களும் லாகூர் சுஃபி மசூதியில் தொழுகை நடத்தினர். இதனால் மசூதியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இவை அனைத்தையும் தாண்டி இன்று காலை உள்ளூர் நேரப்படி 8:30 மணிக்கு டாட்டா தர்பார் கேட் பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.  இந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் சிக்கி ஐந்து காவலர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகப் பாகிஸ்தான் மீட்புக் குழுவின் செய்தி தொடர்பாளர் முகமது ஃபரூக் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் போலீஸ், ``மசூதிக்கு வெளியிலும், உள்ளேயும் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தனர்.


 நுழைவாயிலில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டுதான் இந்தச் செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது. அவனுக்குப் பின்னால் இருக்கும் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

நோன்பு நாளில் பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் குண்டு வெடிப்புக்குப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.