அதர்வாவின் `100' பட ரிலீஸுக்கானத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அதர்வா

MG ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அதர்வா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், `100'. இந்தப் படம் இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அருண் பாலாஜி படத்தின் மீது தடை வாங்கியிருந்ததால் படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. 
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அருண் பாலாஜியும் ஆரா சினிமாஸும் இணைந்து ஜெய் நடிப்பில் `பலூன்'  படத்தைத் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் இருவர் இடையேயான ஒப்பந்தப்படி, MG ஆரா சினிமாஸ் அருண் பாலாஜிக்கு உரிய பணத்தைத் தரவில்லை. இதனால், அந்தப் பணத்தைத் திருப்பித் தரும் வரை MG ஆரா சினிமாஸ் தயாரித்துள்ள `100' படத்தை வெளியிடக் கூடாது எனத் தொடர்ந்த வழக்கில் `100' படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை நீக்கத் தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.    
நூறு
அந்த வழக்கின் இறுதியில் `பலூன்' படத்தின் பாக்கிக்கும் `100' படத்தின் ரிலீஸுக்கும் எந்த ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில் அதர்வா, ஹன்சிகா நடித்த `100' படத்துக்கு எந்த ஒரு தடையும் விதிக்க முடியாது. அதனால் MG ஆரா சினிமாஸ் தயாரிப்பில், சாம் ஆண்டான் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் 100 திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதனால் இன்று வெளியாகவிருந்த `100' நாளை முதல் ரிலீஸாகும். அதேநேரம், நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த  'கீ' மற்றும் 'அயோக்யா' படங்களுக்கு இதேமாதிரி பிரச்னைகள் இருப்பதால் வெளிவருவதில் இழுபறி நீடிக்கிறது.    


 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo  

Powered by Blogger.