ஷூட்டிங் கிளம்பும் கமல்!!
மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்த கமல்ஹாசன் தேர்தலுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் 100 கோடி கேட்பதாக கூறப்பட்டது. விஜய் டிவியிலிருந்து கலர்ஸ் டிவிக்கு ஒளிபரப்பு உரிமை போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விஜய் டிவியே மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
புரொமோஷனுக்கான புகைப்படங்கள், வீடியோக்களில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். ஜூன் முதல் வாரம் இந்த சீசன் தொடங்கவுள்ளது.
அரசியலில் இறங்கியபின் திரைப்படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்த கமல் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தேவர் மகன் 2 படத்தை இயக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் தந்தி டிவிக்கு அளித்த ஒரு நேர்காணலின் போது கமல் இந்தப் படத்தை உருவாக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் கமல் நடிப்பதோடு இயக்குவதாகவும், இளம் நடிகர் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் படக்குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
கருத்துகள் இல்லை