மெல்லப் பேசு..!மின்னல் மலரே!!
தொட்டுவிடத் துடிக்கும் என் நேசங்களை விட்டுவிடச் சொல்கிறாய்
ஏன்?
காலையில் எப்போதும் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவது கனிமொழியின் வழமை. அதிகாலைக் காற்று உடலில்பட்டால் நோய் நொடி அண்டாது என சிறுவயதில் அம்மா சொல்லிக் கொடுத்தது அவளது மனதைவிட்டு மறையவே இல்லை.
இன்றுவரை அந்த பழக்கத்தை அவள் கடைப்பிடித்தே வாழ்கின்றாள். அலாரம் வைத்தது போல சரியான நேரத்திற்கு எழுநதுவிடும் அவளை விடுதியில் இருந்த போது தோழிகள், விசித்திரமாய் பார்ப்பதுண்டு.
அன்றும் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துகொண்டவள், வெளியே வநது பானையில் இருந்த தண்ணீரை முகத்திற்கு அடித்து, கண்களை ஈரப்படுத்தி, நித்திரையை விரட்டிவிட்டு, வாய் நிறைய நீரை மொண்டு கொப்பளித்துவிட்டு வந்தாள்.
வழக்கமான இடத்தில் அமர்ந்து, உள்ளங்கைகளைத் தேய்த்து அதில் முகம் பார்த்துக் கொண்டாள். அப்படியே ஒருநிமிடம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவள், கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து, சிந்தனைகளை நிலைப்படுத்தினாள்.
உணர்வுகள் ஒற்றைப் புள்ளியில் குழுமி நின்றது. மூச்சை இழுத்து வெளியேற்றி, உடலுக்கும் மனசுக்கும் அவள் கொடுத்த இலகு நிலை அந்த நாள் முழுவதையும் புத்துணர்வாக்கும் என எண்ணியபடியே எழுந்து வெளியே வந்தாள்.
அவசரமாய் சமையல் கூடத்திற்குள் புகுந்து, காலைத் தேநீரைத் தயாரித்தவள், சாம்பசிவத்தாரின் படுக்கை அருகே சென்று, மெல்ல குரல் கொடுத்தாள்.
“அப்பா....அப்பா...”
கண்களை மூடி வானொலி ஒலியில் ஆழந்திருந்தவரின் எண்ணங்கள் கடந்த காலத்தில் லயித்திருக்க, அவள் கூப்பிட்டது அவருக்கு கேட்கவில்லை.
மனைவி குந்தவையை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அந்த நாட்களில், மேடை நாடகங்களும், நடன நிகழ்வுகளும் என்றால் ஒரு தனிச் சந்தோசம், சினிமாப் படங்கள், எப்போதாவது தியேட்டரில் பார்ப்பதோடு சரி. அவரும் அவரது உயிர் நண்பன் சத்தியமூர்த்தியுமாக அடிக்கடி நாடக நிகழ்வுகளுக்குச் செல்வதுண்டு.
அப்படி ஒரு நிகழ்வில், ஒரு மலர்வனத்தில் தான் அவர் குந்தவையை முதல் முதலில் கண்டது. ஆம், நடன நிகழ்வொன்றிற்காக ராதையாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த குந்தவையைச் சூழ மலர்க்குவியல், அதில் தனியே நின்று நடனமாடிய அந்தக் கணப்பொழுது அவரது மன உறுதியும் நடனமாட ஆரம்பித்துவிட்டது.
கல்யாண வயசு கடந்த பின்னரும் அதைப்பற்றிய சிந்தனை ஏதுமின்றி இருந்தவர், குந்தைவைநாச்சியாரின், நடனத்தில் தன்னைப் பறிகொடுத்து விட்டார். பின்னர் பல பெண்களும், ஆண்களும் சேர்ந்ததாக நிகழ்வு நடந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அவரது பார்வைக்கு குந்தவையைத் தவிர வேறு யாரும் தெரியவில்லை. அன்று அவரது நண்பன் செய்த கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இல்லை.
அதன் பிறகு அடிக்கடி அவரது நிகழ்விற்குச் சென்று, அவரோடு கதைத்து, காதலைச் சொல்லி, தன் வீட்டையே எதிர்த்து சாம்பசிவத்தாரை திருமணம் செய்துகொண்டார் குந்தவை நாச்சியார். கணவனின் தோளில் சாய்ந்து தன் வீட்டை நினைத்து அவர் அழுதது அன்றைய தினம் மட்டுமே. அதன் பின்னான மணவாழ்வில் மனைவி, தன் வீட்டை நினைத்து வருந்தாதபடி, அன்பினால் நிறைத்திருந்தவர் அவர்.
திருமண வாழ்வு மனதில் படமாய் ஓடியது அவருக்கு. பின் துாங்கி முன்னெழும் மனைவியாக, தலை தடவி அகம் நிறைக்கும் தாயாக, தோள் தாங்கி இதம் கொடுக்கும் தோழியாக என அனைத்துமாய் வாழ்ந்தவர் அவரது மனைவி.
ஒரு நாளேனும் படுக்கையில் படுத்து அவர் கண்டதில்லை, படுத்த முதலும் கடைசியுமான படுக்கை குந்தவையின் மரணப் படுக்கையே, தீராத துயரத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, சின்ன மகளையும், பாலனான வெற்றியையும் அவர் கையில் தந்துவிட்டு காலனின் பிடிக்குள் சென்றுவிட்ட மனைவியை ஒரு கணமேனும் அவரால் மறக்கமுடிவதில்லை.
‘சின்ன வயசுதானே உனக்கு? பிள்ளையைப் பாக்கவேனும் ஒரு துணை வேணும், இப்பிடியே தனிமரமா எவ்வளவு காலத்துக்கு நிக்கப்போறாய்?‘ பலபேரின் பலவாறான கேள்விகளுக்கு அவரது பதில் ஒன்றாகவே இருந்தது,
‘எனக்கு மனைவியா வாழ்ந்ததும் காலம் முழுதும் என் மனதில் வாழப்போறதுதும் குந்தவை மட்டும்தான், அந்த இடத்தை யாருக்கும் என்னால் கொடுக்கவே முடியாது‘ திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
சத்தமாக கூப்பிட, அந்தச் சத்தத்தில் அப்பாவின் மகன் விழித்து விடுவானோ என்பதுதான் கனிமொழியின் பயம். கதவிற்கு சற்று அருகே சென்று,
“அப்பா..... அப்பா.. ” என்றாள். பதில் இல்லை.
“அப்பா..........” மீண்டும் அழைத்த அவளது அழைப்பில்......கதவு திறந்தது.
.சற்றே சத்தமாய்க் கேட்ட அந்தக் குரலொலியில் சட்டென்று நினைவுகள் அறுபட எழுந்துகொண்டவர், புன்னகையோடு நின்ற கனிமொழியை கனிவோடு பார்த்தார்.
தனது நீண்ட முடியை உயரத்துாக்கி கொண்டை போட்டிருந்தாள். சின்னதாய் ஒரு பொட்டு, நீண்ட அழகான விழிகள். கூர் மூக்கு, எடுப்பான நாசி, சிரிக்கும் போதும், கதைக்கும் போது ஓடிச்சென்று விழும் அழகான கன்னக்குழிகள், என அவள் உண்மையில் பேரழகியாகவே இருந்தாள்.
“என்னம்மா.... எழுந்திட்டியா?” என்றபடியே அவள் கொடுத்த தேநீரை வாங்கிக்கொண்டார்.
“மெல்ல...மெல்ல...உங்கட பிள்ளை எழுந்திடப்போறார்....”அவள் ரகசியக்குரலில் சொன்னதை சிரிப்போடு பார்த்தவர்,
“அவன் எப்பவோ எழுந்திட்டான், அவனுக்கும் தேநீரை குடம்மா...”என்றவரிடம்,
“எழுந்திட்டாரா?”விழிகளை அகலவிரித்து கேட்டவள்,
“நான் கொண்டுவாறன், நீங்கள் கூப்பிடுங்கோ...”என்றாள் தயக்கமாய்.
“எடுத்திட்டு வா, நான் கூப்பிடுறன்”
, “சரி, அப்பா” என்றபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அவள் பேசியதை வெற்றியும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். முன்னைய இரவுதான் அவன் வந்திருந்தான். அதனால் அவன் எழுந்துவிடக்கூடாது என்னும் அக்கறையில் அவள் பேசியது அவனுக்கு இதமாகவே இருந்தது. ஆனால்,‘தேநீரை அவளே உள்ளே வந்து தந்தால் என்ன,‘ என்று தோன்றியது.
இரண்டே நிமிடத்தில் தந்தையின் குரல், “வெற்றி.....” என ஒலிக்க, அவசரமாய் எழுந்து சென்றான். அதிகாலையிலேயே அவளைப் பார்த்துவிட எண்ணி விரைந்தவன், ஏமாற்றத்தோடு திரும்பி வந்தான். தேநீரை வைத்துவிட்டு அவள் சென்றுவிட்டிருந்தாள்.
மீண்டும் கட்டிலில் புரண்டவன், கைபேசியை உயிர்ப்பித்து அதிலிருந்த அவளது படத்தை உற்றுப் பார்த்தான். புன்னகை புரி்ந்த செவ்வதனமும் கதை பேசிய நயனங்களுமாய் அவளது அழகு அபரிதமாய் இருந்தது. அதிலும் அவளது கையில் நெளிந்த அவளது மகனை உச்சிமுகர்ந்து முத்தமிட்ட போது எடுத்த அந்த புகைப்படத்தில் அவள் தேவதையாகவே தெரிந்தாள்.
மகன் அனந்திதன் மீது அவள் கொள்ளை அன்பை வைத்திருந்தாள். மற்றவர்களிடம் இறுக்கமாய் இருக்கும் அவளது முகம், மகனைக் காணும்போதும் அவனோடு விளையாடும் போதும் பிராகாசித்து ஜொலிப்பதை பல தடவைகள் ஒளித்திருந்து கண்டிருக்கிறான் வெற்றி.
தொடரும் .
கோபிகை
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை