சர்ச்சைப் பதிவுக்கு பார்த்திபன் விளக்கம்!!

விஷால் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படமான 'அயோக்யா' குறித்து அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு செய்துள்ளார். 1994-ல் வெளியான அவரது 'உள்ளே வெளியே' படத்தைத் திருடி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகவும், அதில் தன்னையும் நடிக்க வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து பார்த்திபனிடம் பேசினோம், ``யார் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. என் கதையைத் திருடுறானேனு சந்தோசப்படுவேன். கேஸ் போடுவதாக இருந்தால் முன்னவே சொல்லியிருப்பேனே. இணையத்தில் ஒருவர் விமர்சனத்திலேயே சொல்லியிருக்கிறார். எனக்குத் தெரிந்தேதான் இந்த படத்தில் கமிட் ஆனேன். ஒரு கெட்ட போலீஸ், அந்த ஸ்டேஷனில் இருக்கும் ஒரு ஏட்டு மூலமா திருந்துவான். அதான் கதை. 'உள்ளே வெளியே' படத்தில் கே.எஸ். ரவிக்குமாருக்கு பதிலாக, என் ஸ்கூல் டீச்சர் வீரராகவன் என்பவரை நடிக்க வச்சேன். இந்த மாதிரி காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்னு கடைசியா போர்டு வைப்பேன்.
சர்ச்சை
அது எல்லாம் இந்த படத்தில் இருக்கு. அப்படியே இருக்கு அதுதான் பிரச்னையே. 'உள்ளே வெளியே' பார்ட் 2 என்று வச்சிருந்தால் சரியாக இருந்திருக்கும். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதனால் ட்விட்டரில் பதிவிட்டேன். உண்மையா, இல்லையா என்பதை இரண்டு படத்தையும் பார்த்தாலே தெரிந்துவிடும். புதிய பாதை படத்தில் வரும் பிளாக் & வொய்ட் போர்சனை திருடி வேறு ஒரு பெரிய இயக்குநர் படத்தில் வந்துடுச்சு. கதையின் மேஜர் பார்ட் இது. இந்த பதிவை பார்த்ததும் எனக்கும், விஷாலுக்கும் ஏதோ பிரச்னைனு நினைச்சுட்டாங்க. இன்று காலையில்கூட இரண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்:பார்த்திபன்
இதை சொன்னால் இன்னும் பல பேருக்கு தெரியும் என்பதால் சொன்னேன். ரிலீஸ் ஆன இரண்டாவது நாளே இதை சந்தோஷமாதான் பதிவிட்டிருக்கேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை" என்றார் பார்த்திபன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colomboபார்த்திபன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.