விமானத்தை தரையிறக்குவதில் எதிர்பாராத சவால்!!
பயணிகள் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட மியன்மார் விமானிகள் அவ்விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
மியன்மார் தேசிய விமான சேவையின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் சீராக தொழிற்பாடாமையின் காரணமாக அவ்விமானத்தை தரை இறக்குவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் இல்லாமலும், பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமலும், குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து விமான சேவை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடாத நிலையில், தரையிறக்கப்பட்ட விமானம் 96 தொடக்கம் 114 இருக்கைகளை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கடந்த புதன்கிழமை பங்களாதேஷை சேர்ந்த விமானம் ஒன்று, மியன்மார் ஓடுதளத்தில், கடும் காற்று காரணமாக ஓடுபாதையினை விட்டு விலகியமையால், ஏறக்குறைய 17 பேர் காயத்துக்குள்ளாகியிருந்த நிலையில், இது மியன்மார் நாட்டில் இவ்வாரத்தில் பதிவாகியிருக்கும் இரண்டாவது விமான விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறயினும் இவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளை எந்தவிதமான ஆபத்துக்களும் ஏற்படாமல் தரையிறங்கிய விமானி அனைவராலும் பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை