யாழ். பல்கலையில் பதாதைகள்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி கருத்து கூறும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பல்கலை சூழலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாதைகளில் ‘வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள் விரையமாகாமல் கல்வி நடவடிக்கைகள் தொடங்க ஆவன செய்க’, ‘விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும்’, ‘வீணே மூடிக்கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும், ‘காக்கவென வந்த சட்டங்கள் அப்பாவிகளுக்கெதிரானது ஏன்?’, ‘மாணவர்களின் கல்வி சிறையிலா?’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது.
பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த 3ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தினுள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்னர்.
இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்திருந்தனர்.
அத்தோடு, பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனுடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து, அங்கு பணியில் இருந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த கைது நடவடிக்கை அரசின் திட்டமிட்ட செயல் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து தமிழ் இனத்தின் குரலை அடியோடு நசுக்கும் செயல் என தெரிவித்து, பலர் தமது எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் அவர்களுடைய விடுதலையையும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவர்களை விடுவிப்பதற்காக பல்கலைக்கழக சமூகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.