றிசாட் விடயத்தில் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையே இன்றைய தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு மாகல்கந்தே சுதந்த தேரர் சம்பந்தனிடம் கோரியுள்ளார்.

கூட்டமைப்பு அரசியல் தலைமைகள் என்ன முடிவு எடுக்கும் என்பது தான் இங்கு உள்ள வினா...

இதிலும் கிழக்கில் முதலமைச்சரை விட்டுக் கொடுத்த விட்டு 1000 விளக்கம் ஆயிரம் வியாக்கியானம்...

பின்னர் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் கக்கீம் காத்தான்குடியில் 07ஆசனங்களுடன் கூட்டமைப்பை அடி பணிய வைத்து விட்டோம் என மார்பு தட்டினார் அதற்கு கூட்டமைப்பு எந்த பதிலும் கூறவில்லை..

கூட்டமைப்பு யாருக்கு சொந்தமான கட்சி முஸ்லிம் தலைவர்களிற்கா அல்லது தமிழ் மக்களிற்கா..

அமைச்சர் றிசாட் விடயத்தில் என்ன முடிவு எடுக்கும் கிழக்கில் ஒரு வரலாற்று தவறு செய்தது போல் வடக்கிலும் ஒரு வரலாற்று தவறை செய்து அமைச்சர் றிசாட்டை காப்பாற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் மன்டியிட்டு விட்டு மீண்டும் 1000விளக்கம் கொடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம் மக்களை குற்றமிழைத்த அரசியல் வாதிகளுடன் ஒப்பிட்டு பார்ப்தால் தான் இந்த முடிவு பயங்கரமாக உள்ளது.

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஏற்பாடு செய்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதாரங்களையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் இதற்கு என்ன விளக்கம்...

அமைச்சர் றிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக ஆதாங்களுடன் குற்றச்சாட்டு நிருபிக்கப் பட்டுள்ளது.

இதை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஹிஸ்புல்லா விசாரனைக்கு உட்படுத்த பட வேண்டியவர் என பாராளுமன்றம் மற்றும் பொது வெளியில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.