புவி வெப்பமடைதல் தொடர்பில் ஐ.நாவின் குற்றச்சாட்டு!!

புவி வெப்பமயமாதலை 1.5 வீதமளவில் குறைக்க சரியான நடவடிக்கைகளை உலகம் எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.


நியூஸிலாந்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டெரஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உடன் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக கவனம் கொள்ளாமையின் அபாயம் குறித்து அங்கு மேலும் தெரிவித்த அன்டனியோ குட்டெரஸ், காலநிலை மாற்றமானது நம்மை விட வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறதெனவும், கடந்த நான்கு வருடங்கள் மிகவும் வெப்பமான காலப்பகுதிகளாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 2015ம் ஆண்டு பரிஸில் எடுக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான தீர்மானத்தின் பிரகாரம், புவி வெப்பமயமாதலை மேலும் 1.5 வீதத்தால் குறைப்பதற்கு நாடுகள் தீர்மானித்திருந்தமையினை அன்டனியோ குட்டெரஸ் நினைவுபடுத்தியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் நடைபெறுகின்ற ரமழான் மாதத்தில், தனது ஆதரவை, கடந்த மார்ச் 15ம் திகதி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூஸிலாந்துக்கு பயணித்துள்ள அன்டனியோ குட்டெரஸ், காலநிலை மாற்றத்தினை மையப்படுத்திய பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.