அழிவின் விளிம்பில் ஆபிரிக்க நீர்யானைகள்!!

ஆபிரிக்க நீர் யானைகள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆபிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை நீர் யானைகள். ஆபிரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகவே நீர் யானை கருதப்படுகிறது.

Hippopotamus என்ற அதன் ஆங்கிலப் பெயருக்கு கிரேக்க மொழியில் ‘ஆற்றுக் குதிரை’ என்று பொருள்.

நிலத்தில் வாழும் பாலூட்டி விலங்குகளில் யானை, காண்டாமிருகம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக எடை கொண்டது நீர் யானை.

ஆபிரிக்காவின் சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும் பொருட்டு நீர் யானைகள் பெரும்பாலும் நீரில் அமிழ்ந்தே பொழுதைக் கழிக்கின்றன.

அண்மையில் ஆபிரிக்கா முழுவதும் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது.

புல்வெளிகளின் பரப்பு குறைந்துவருவது அவற்றின் எண்ணிக்கை சரிவதற்குக் காரணம் என்கின்றனர் விலங்குநல ஆர்வலர்கள்.

நீர் யானைகளின் எண்ணிக்கை குறைவதால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நீர் யானையின் சாணத்தில் காணப்படும் பொருள்கள், ஆற்று நீரில் இருக்கும் இரசாயனங்களின் அளவைச் சமன்படுத்த உதவுகிறதாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.