சிங்கள காடையர்கள் கனடாவிலும் போர்க்கொடி!!

ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோ அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு தமிழினப் இனப்படுகொலை நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.


இதில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டு 2009 நடந்தது தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை என்பதை கனடிய மற்றும் பல்லின மக்களுக்கு எடுத்து கூறும் வகையில், தாம் 2009ஆண்டு பாவித்த பல்லின மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் பதாதைகளை தாங்கியபடி நாடாளுமன்றத்தின் முன்னே முறையாக அனுமதி பெற்று நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள இனத்தைச் சார்ந்த ஒரு பௌத்த பிக்கு உட்பட 25 நபர்கள் சிங்கக் கொடியுடன் தமிழர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்றும், போரில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்றும் சிங்கக் கொடியை உயர்த்தி பிடித்தபடி கோசம் இட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் 2009 இனப்படுகொலை சாட்சியாளர் வைத்தியர் வரதராஜா பங்கு கொண்டு இறுதிப் போரில் நடந்த விடயங்களை மிகவும் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

மொன்றியலில் இருந்து வந்த பிதா ஜூட் நிக்சன் ஈஸ்டர் தினத்தில் நடந்த படுகொலை மற்றும் 2009 இனப்படுகொலை போன்றவை மீண்டும் எமது இனத்துக்கு நடக்க கூடாது என்று பிரார்த்தனை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சார்ந்த இளையோர் பலர் சிறுவர்களை பார்த்து நீங்கள் தான் அடுத்த தலைமுறையினர் என்றும் எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்றும் எடுத்து உரைத்துள்ளனர்.

இறுதியாக ஒட்டாவா நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அனிதா வன்டென்பெல்ட் அம்மையார் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த கொடூரமான இனப்படுகொலை குறித்த விடயங்களை தான் மிக நன்றாக அறிந்து உள்ளதாகவும், தமது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

இறுதியாக இரண்டு நிமிட அமைதி வணக்கத்துடன் இனப்படுகொலை ஞாபகார்த்த நிகழ்வு ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன் நிறைவடைந்தது.

கலந்து கொண்ட அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் உத்வேகத்துடன் தமிழின விடுதலை நோக்கிய போராட்டங்களை முன்னெடுப்பதாக உறுதி எடுத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.