பேஸ்புக்கில் போடப்பட்ட பதிவு: சிலாபத்தில் நடந்தது என்ன??

DONT  LOUGH  MORE  1DAY  U   WILL CRY அதிகம் சிாிக்காதே ஒருநாள் அழுவாய் என பேஸ்புக்கில் போடப்பட்ட பதிவு ஒன்றினால் நேற்றய தினம் சிலாபம் நகாில் கடுமையான பதற்றநிலை உருவாது.



அதன் பிரகாரம் பிரதேச அமைதியை உறுதி செய்ய சிலாபம் நகர பகுதிக்கு நேற்று (12) முற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கைப் பிறபிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.

இந்நிலையில், ஹஸ்மர் ஹமீத் எனும் பெயரில் குறித்த பேஸ்புக் கணக்கை வைத்திருந்த   38 வயதான அஹமட் ஹமீத் ஹஸ்மர் என்பவரை சிலாபம் பொலிஸார் சந்தேகத்தில்  கைது செய்துள்ளதாகவும்,

அவரை அவசரகால சட்டம் மற்றும் ஏனைய சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைத்து அந்தப் பதிவு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.

இந்நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிலாபம் எங்கும் பொலிஸார்,  விசேட அதிரடிப் படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று  முற்பகல் , சிலாபம் பஸார் பகுதியில் ஆடை  விற்பனை நிலையம் ஒன்றை நடத்திவரும் குறித்த சந்தேக நபர் தனது பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவு ‘ அதிகம் சிரிக்காதே, ஒரு நாள் நீ அழுவாய் ‘ எனும் அர்த்தத்தை தரும் விதமாக  ஆங்கில மொழியில் இடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவில் கீழ்  கருத்துக் கூறிய இருவருக்கு இடையே அந்தப் பதிவை மையப்படுத்தி வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதன்போது அப்பதிவின் கருத்து வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கமானது மீன்டும் ஒரு  தாக்குதல் இடம்பெறலாம் என்ற மாயையை தோற்றுவித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கருத்து பதிவு செய்த ஒருவர் சார்பிலான குழுவினர் சிலாபம் நகரில் ஒன்று கூடியுள்ளனர்.

இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடி இது குறித்த எதிர்ப்புக் கோஷம் எழுப்பியுள்ளனர்.  பேஸ்புக்கில் உள்ள பதிவால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும்

அதனால் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் நிலையம் முன்பாக கூடியவர்கள் பொலிஸாருக்கு கடும் தொனியில் கூறியுள்ளனர்.

இதனிடையே ஒரு குழு, சிலாபம் நகரில் கடைகளை மூடுமாறு குறிப்பிட்டு அங்கு சென்று அழுத்தம் கொடுத்துள்ளதுடன்,

குறித்த பதிவை இட்டவரின் கடைப் பகுதிக்கும் சென்றதால் பெரும் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. இதன்போது, அங்கு சென்றவர்கள் பலர் வன்முறைகளை தூண்டும்  விதமாகச்  செயற்பட்டதால்

அங்கிருந்த இராணுவத்தினர் அவர்களைக் கலைக்க வானத்தை  நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்க்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் நிலையத்தின் முன்பாக கூடிய பலரும்  குறித்த குழுவினருடன் சேர்ந்ததால் நிலைமை மோசமானது.

அவர்களின் வன்முறையுடன் கூடிய நடவடிக்கையால் சிலாபம் மைக்குளம் ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் வட்டக்களி தெளஹீத் ஜமாஅத் நிலையம் ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகின.

மேலும் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இந்நிலையிலேயே பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்ய பொலிச் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது.

முதலில் இன்று காலை 6.00 மணி வரையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பின்னர் இன்று அதிகாலை 4.00 மனி வரை  நேரம் குறைக்கப்ப்ட்டது.

 சம்பவம் தொடர்பில் சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  பிரதேசத்தின் பாதுகாப்புக்கும் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.