நடுவரைத் திட்டித் தீர்த்து தேம்பி அழுத சிறுவன்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் இது டீம் இல்ல.. ஓர் உணர்வு' இந்த வாசகத்தை இந்த ஐபிஎல் சீஸனில் எங்காவது ஓரிடத்தில் கேட்டிருப்பீர்கள்.
அது உண்மைதான். சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கிரிக்கெட் டீம் என்பதையும் தாண்டி தமிழக இளைஞர்களின் உணர்வாக மாறிபோகியுள்ளது. இந்த உணர்வை வெறியாக மாற்றியது என்னவோ இந்த சீசனில் மும்பைக்கு எதிரான தோல்விதான். லீக் போட்டிகளில் இரண்டு தோல்வி, குவாலிபையரில் ஒரு தோல்வி என இந்த சீஸனில் மும்பைக்கு எதிராகத் தொடர்ந்து மூன்று தோல்வி. இருந்தாலும் இரண்டாவது குவாலிபையரில் டெல்லி அணியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது சென்னை. இதனால் இந்த முறை எப்படியும் வெற்றி தான். மும்பையை பழி தீர்த்துவிடலாம் என நினைத்த ரசிகர்களுக்குக் கடைசி பந்தில் டுவிஸ்ட் கொடுத்தார் மலிங்கா. இதனால் இந்த சீஸனில் ஒரு போட்டி கூட மும்பைக்கு எதிராகச் சென்னை வெற்றி பெற முடியவில்லை.

13-வது ஓவர் வரை `மேல இருக்கவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்' என்பது போல் `தோனி இருக்காரு பாத்துக்கிடுவாரு' என இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அந்த ஓவரில் தோனியின் எதிர்பாராத ரன் அவுட் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களையும் தலையில் கைவைக்க வைத்துவிட்டது. நேற்றைய தோல்விக்கு திருப்புமுனையாக அமைந்தது தோனியின் அந்த ரன் அவுட்தான். இந்த ரன் அவுட் சர்ச்சையாகவும் மாறிப்போனது. ரீப்ளேவில், தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னர், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கொடுக்கப்படும் வேளையில் இப்படி அவுட் கொடுக்கப்பட்டது ஏன் என சென்னை ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி ஒரு விவாதம் வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு வீடியோவும் வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.

அது சிறுவன் ஒருவன் சென்னையின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தோனியின் அந்த ரன் அவுட், அவுட் இல்லை எனவும் அவன் தேம்பித் தேம்பி அழுவதுதான் அந்த வீடியோவின் ஹைலைட்.  அந்த வீடியோவில், சிறுவனின் தாய் அவர்கள் தோற்றத்துக்கு நீ ஏன் அழுகிறாய் எனக் கேட்க ``தோனி அவுட்டே இல்லை. சும்மாதான் அவுட்டுன்னு கொடுக்குறாங்க'' எனக் கூறி மூன்றாவது அம்பயருக்கு சாபம் கொடுக்கிறான் அந்தச் சிறுவன். பார்ப்பவர்கள் ரசிக்கும்படியாக இருக்கும் இந்த வீடியோ சென்னை ரசிகர்களை வெகுவாக கவர தற்போது வீடியோ வைரல் ஹிட்.

இப்போது தெரிகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ் இது டீம் இல்ல உணர்வுதான் என்பது...!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.