செம்பருத்தி தொடரில் இயக்குநர் மாற்றம்!!

சீரியல்களில் `இவருக்குப் பதில் இவர்’ என ஹீரோ, ஹீரோயின்களை அவ்வப்போது மாற்றப் பார்த்திருப்பீர்கள்.
பின்னணியில், சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களின் கால்ஷீட் பிரச்னை முதல், சம்பளப் பிரச்னை வரை பல காரணங்கள் சொல்லப்படும். இயக்குநர், தயாரிப்புத் தரப்புடனான மோதல் போக்கும் கூட நடிகர், நடிகைகளின் மாற்றதுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டதுண்டு. நடிகர், நடிகைகள் மாறும் போது எல்லோருக்கும் தெரிகிறது. இயக்குநர்கள் மாறினால்?
ப்ரியா ராமன், சபானா நடித்து தமிழ்த் தொலைக்காட்சிகளில் நல்ல டி.ஆர்.பி.யுடன் முன்னணியில் இருக்கும் `செம்பருத்தி’ சீரியலை இயக்கி வந்த சுலைமான் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் நீராவிப் பாண்டியன் இயக்கத் தொடங்கியிருக்கிறார்.

என்ன காரணம்? விசாரித்தால் நிறைய தகவல்களைச் சொல்கிறார்கள், பெயர் குறிப்பிட விரும்பாத சீரியலில் தொடர்புடைய நட்சத்திரங்கள். `சீரியல் ஹிட் ஆன பிறகே ஒவ்வொரு பிரச்னையா வரத் தொடங்கியது. சீரியல் ஹிட் ஆக ஆக, பிரமாண்டத்துல  காம்ரமைஸ் பண்ணிக்காமப் பண்ணச் சொன்னது சேனல் தரப்பு. ஆனா தயாரிப்பாளரோ எபிசோடுக்கு சேனல்ல இருந்து கிடைக்கிற பணம் போதாதுன்னு சொல்லிட்டிருந்தார். இந்த முரண்பாடு களையப்படாமலேயே இருக்க, ஒரு கட்டத்துல தயாரிப்பாளர் சீரியலை விட்டு ஒதுங்கிட்டார். தயாரிப்பாளர் ஒதுங்கியதன் தொடர்ச்சியாத்தான் இப்ப இயக்குநர் விலகியதையும் பார்க்கணும்’ என்கிறார்கள்.


ஜீ தமிழ் சேனல் டி.ஆர்.பி. யில் ஒரு புதிய சாதனையைத் தொடக் காரணமான சீரியல் செம்பருத்தி. நான் தொடரை இயக்கிட்டிருந்த காலத்துல இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டதுங்கிறதை நினைக்கிறப்ப பெருமையா இருக்கு. நான் வெளியேறிட்டாலும், சீரியல் ஒளிபரப்பாகிட்டேதான் இருக்கும். `யார் இயக்கினாலும், சீரியல் இன்னும் ஹிட் ஆகட்டும்’னு வாழ்த்தறேன். மத்தபடி வெளியேறியதன் காரணங்களை டீடெய்லா பேச விரும்பலை’ என்கிறார் சுலைமான்.

நீராவிப் பாண்டியனிடம் பேசிய போது, `இப்பதான் சீரியலுக்குள் வந்திருக்கேன். இவ்ளோ நாள் சீரியல் எப்படிப் போச்சுங்கிறது தெரியும். முந்தைய விறுவிறுப்பு குறையாம, அதேநேரம் என் ஸ்டைல்ல என்ன புதுமை பண்ண முடியுமோ அதையும் பண்ண முயற்சி பண்ணுவேன்’ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.