படையினரின் தொடர் கண்காணிப்பில் குருநாகல்!!

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற தொடர் வன்முறை சம்பவங்களினால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஆனாலும் தொடர் பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் நேற்று சில குழுக்கள் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதை தொடர்ந்தே நாட்டில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

குறித்தப் பகுதியிலுள்ள பல வணக்கஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தாக்கப்பட்டமையால் அமைதியில்லாத நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து, கொபேகனே, ரஸ்நாயக்கபுர, குளியாபிட்டிய, பிங்கிரிய பகுதிகளிலும் மக்களுக்கு சொந்தமான வர்த்கத நிலையங்கள், வீடுகள், வணக்கஸ்தலங்கள், வாகனங்கள் என்பன சேதப்படுத்தப்பட்டதையடுத்து, விசேட அதிரடிப் படையினர் விரைந்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேலும், இந்த நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் வடமேல் மாகாணம் முழுவதிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் கம்பஹாவிலும் அசாதாரண நிலைமை ஏற்பட்டது.

மினுவங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து கம்பஹா மாவட்டத்திலுள்ள ரஸ்நாயக்கபுர, கிரிந்திவெல, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வெயாங்கொட, வெலிவேரிய, யக்கல ஆகிய பகுதிகளிலும் அமைதில்லாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில், வன்முறைச் சம்பவங்ளை நாடளாவிய ரீதியாக பரவாமல் தடுப்பதற்காகவும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் நேற்று இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பகுதிகளில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியாக பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த ஊடரங்குச் சட்டமானது இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து மக்களும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென அரசும் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இத்தகைய சம்பவங்களினால் வெளிநாட்டு சக்திகளுக்கே வாய்ப்பாக அமையும். ஆகையால் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞர்கள் சட்டத்தை கையிலெடுத்து மீண்டுமொரு கறுப்பு ஜுலையை உருவாக்கிவிட வேண்டாமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.