செல்லப்பிராணிக்கு பெயர் வைத்து கைதான வாலிபர்! சீனாவில் சம்பவம்!!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நாய்களுக்குப் பெயர் வைத்ததற்காகக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்படி என்ன பெயர் வைத்தார் என்று கேட்கிறீர்களா.
`Chengguan, Xieguan' என்பதுதான் அந்தப் பெயர்கள். இது அங்குள்ள சட்டம் ஒழுங்கு அதிகாரிகளைக் குறிக்கும் சொற்கள். `Chengguan' என்றால் நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களைக் கண்காணிப்பவர்களைக் குறிக்கும். `Xieguan' என்றால் டிராஃபிக் அதிகாரிகள் போன்றவர்களைக் குறிக்கும். நாய்களுக்கு இப்படிப் பெயர் வைத்த பேன் என்னும் வாலிபர், இதைப் பற்றி சீனாவின் பிரபல மொபைல் மெசேஞ்சரான WeChat-ல் இதுகுறித்து பதிவிட, இது காவல்துறையின் பார்வையை எட்டியுள்ளது.

அவர்கள் உடனடியாக இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதிகாரிகளை இழிவுபடுத்துவதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டது. இப்போது 10 நாள்கள் சிறப்புக் காவலில் இருக்க வேண்டும் என்ற தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெய்ஜிங் நியூஸிடம் பேசிய பேன், ``இது சட்டப்படி தவறு என்று எனக்குத் தெரியாது, நான் ஜாலியாகத்தான் அப்படிச் செய்தேன்" என்றார்.

இந்த நடவடிக்கை குறித்து அங்குள்ள சமூக வலைதளங்களில் சிலர் 'அவர் வேண்டுமென்றே வம்பை வாங்கிக்கொண்டார்', 'நாய்களை இப்படி அழைக்கக் கூடாது என்று எங்கு சட்டம் இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.