மரங்கள் இணையும் இன்டர்நெட்!!

உலகிலுள்ள அனைத்து மனிதர்கள் இணையும் இணையத்தை world wide web என்று கூறுவதுபோல் மரங்கள் அனைத்தும் இணையும் இந்த இணைப்பை ஆய்வாளர்கள் wood wide web என்று அழைக்கின்றனர்.

இந்த உலகிலுள்ள எந்த மரமும் தனியாக இல்லை. மனிதர்களுக்குள் எப்படிச் சமூக உறவுகள் உள்ளனவோ அதைப் போலவே மரங்கள் மத்தியிலும் தொடர்பு இருக்கின்றது. உலகின் எல்லாக் காடுகளுக்கும் எல்லா மரங்களுக்கும் இடையே நிலத்துக்கு அடியில் வேர்கள், பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் போன்றவற்றின் உதவியோடு தொடர்பு இருப்பது ஆய்வுமுடிவுகளில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் 70 நாடுகளில் 28,000 வகைகளைச் சேர்ந்த 12 லட்சம் மரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழைமையான நுட்பமான தொடர்பு இவை அனைத்துக்கும் இடையே இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொடர்பு, நிலத்துக்கு அடியில் நீண்டுசெல்லும் வேர்களாலும் அவற்றை மற்ற மரங்களோடு இணைக்க வைக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றாலும் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மரங்களின் நிலத்தடி அமைப்புகளை ஆய்வு செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் அதன் மாதிரி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். ஆய்வுக்குழுவில் ஒருவரான மெர்லின் ஷெல்டிரேக் (Dr.Merlin Sheldrake) பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், "உலகம் முழுவதும் நம் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்பதைப் புரிந்துகொள்ள முயன்றது இதுவே முதல்முறை. மூளையை எ.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இதுவும் இருந்தது. இது பூமியின் சூழலியலைப் புரிந்துகொள்வதில் நமக்குப் பேருதவி புரியும்" என்று கூறியுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து மனிதர்கள் இணையும் இணையத்தை world wide web என்று கூறுவதுபோல் மரங்கள் அனைத்தும் இணையும் இந்த இணைப்பை ஆய்வாளர்கள் wood wide web என்று அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பைக் கொண்டாட வேண்டிய நாம், இதை நினைத்துக் கவலைப்பட வேண்டிய சூழலிலும் இருக்கிறோம் என்பது ஒருபுறம் வருத்தமாகவும் உள்ளது.

இந்தத் தொடர்பு ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பது மைக்கோரைசல் (Mycorrhizal fungi) என்ற பூஞ்சைதான். இது மரங்களுக்கு நடுவே தொடர்பு ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், மரங்கள் கிரகிக்கும் கரிமங்களைச் சேகரித்தும் வைக்கின்றன. மரங்களுக்குத் துணைபுரியும் இந்தப் பூஞ்சையை ஹீரோ என்று வைத்துக்கொள்வோம். ஹீரோ என்றிருந்தால் வில்லனும் இருக்கத்தானே வேண்டும். அதுதானே வழக்கம். அப்படிப்பட்ட வில்லன்தான் ஆர்பஸ்குலார் (Arbuscular fungi) என்ற பூஞ்சை. இது கரிம வாயுவை மரங்களிலிருந்து வாங்கிச் சேகரித்து வைப்பதற்குப் பதிலாக வெளியே உமிழ்கின்றன. "மரங்களை இணைக்கும் நுண்ணுயிரிகளைப் புரிந்துகொண்டால் பூமியின் சூழலியல் சிக்கல்களுக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதாவது வழி கிடைக்கலாம். அதற்கான ஆய்வுகளிலும் ஈடுபடப் போகிறோம்" என்றும் ஷெல்ட்ரேக் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.