முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலி உறுப்பினரின் உடலம் நீதவான் முன் தோண்டி எடுக்கப்பட்டது!📷

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும்வேளை கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலத்தின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது .


சட்டவைத்திய அதிகாரி ,மற்றும் தடயவியல் பொலிசார், மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .
மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கிரோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டன.
இந்த உடலை சிதைவில் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு  2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.