அமெரிக்காவின் இராணுவ தளம் இலங்கையில்!!

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்காவின் வெளிவிவகார ராஜாங்க செயலாளர் மைக் போம்பேவை சந்தித்துள்ளார்.


5 அமெரிக்கர்கள் உட்பட 250 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் இதன் போது, அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கூறியுள்ளார்.

.@SecPompeo met with Sri Lankan Foreign Minister Marapana & reiterated the United States’ condemnation of the attacks that #SriLanka suffered last month, which also killed five Americans, & strong U.S. support for Sri Lanka in its fight against terrorism. https://t.co/Sn6aenPiWy pic.twitter.com/n0tWd5hoV9

— Morgan Ortagus (@statedeptspox) 16. Mai 2019
பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது முழுமையான உதவியை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொறுப்புக் கூறல், மறுசீரமைப்பு தொடர்பான இலங்கையின் புதிய அர்ப்பணிப்புகளை பாராட்டுவதாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ தளம் ஒன்றை அமைக்க இலங்கை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.