தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி நெதர்லாந்தில் எழுச்சி பேரணி!

நெதர்லாந்தில்  முள்ளிவாய்க்கால்  10வது ஆண்டு  தமிழின அழிப்பு நாளை  முன்னிட்டும் தமிழீழத்தில் தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் எழுச்சிப்பேரணி மற்றும் அரச பிரதிநிதிகளுடனான  சந்திப்பும் இடம்பெற்றது.


ஹாக்கில் (DenHaag) அமைந்துள்ள சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்திற்கு  முன்னால் ஈழத்தமிழ்மக்கள் நீதிவேண்டி முழக்கமிட்டனர். அதனை தொடர்ந்து சர்வதேகுற்றவியல் நீதிமன்றத்தில் மனுகையளிப்பும்  கலந்துரையாடலும் நடைபெற்றது.

இப்பேரணியானது நெதர்லாந்து பாராளுமன்றம் நோக்கி  நகர்ந்தது. பேரணிக்கு நெதர்லாந்து  காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கிருந்தனர். இந்தப் பேரணியில் மக்கள அச்சுறுத்தும் முகமாக சிறீலங்கா தூதரக அதிகாரிகள  இருவர்  புகைப்படம்  எடுக்க முயற்சித்த வேளையில் அவர்களை காவல்துறைக்கு  அடையாளம்  காட்டியபொழுது  கலைந்து  சென்றனர்.

பேரணியானது  பாராளுமன்றத்தை  அடைந்ததும்  நீதிவேண்டி  முழக்கமிட்டனர்.  அதனை  தொடர்ந்து நெதர்லாந்து  மக்களவை  உறுப்பினர்களும்  இளையோர் அமைப்பினரும் இணைந்து  பாராளுமன்ற  உறுப்பினர்களுடனான  ஒழுங்கு செய்யப்பட்ட   சந்திப்பில்  மனுக்கையளிக்கப்பட்டதோடு  சர்வதேச நீதிவிசாரணை,  தமிழ்மக்களுக்கு   அரசியல்தீர்வு,  தமிழர்நிலத்தில் இருந்து   இராணுவத்தை வெளியேற்றுதல்   போன்ற தமிழ்மக்கள்  எதிர்நோக்கம்  பிரச்சனைகளும்  விரிவாக எடுத்துகூறப்பட்டது.

கடந்த  காலங்களில் நெதர்லாந்தில் தமிழ்த்தேசிய  செயற்பாட்டாளர்களை  கைது  செய்து  ஆதாரமற்ற    குற்றச்சாட்டுகளை   சுமத்தியதால்  இங்கு வாழுகின்ற  மக்கள்  இதுபோன்ற   நிகழ்வுகளில்  கலந்து  கொள்வதை  தவிர்த்து வந்திருந்தனர். நேற்றைய  பேரணியானது பொறுத்தது போதும் எங்கள் இனத்தின்  விடிவிற்கு  தார்மீகவழியில்  தொடர்ந்து  போராடுவோம்  என  அனைத்து மக்களும்  உறுதி  எடுத்துக்கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboNo comments

Powered by Blogger.