அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்!

தமிழில் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாமி-2. ஹரி இயக்கியிருந்த அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
அந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம், ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்திருக்கிறார். கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசனும் நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் கெளதம் மேனன் இயக்கத்தில் `துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் ரிலீஸுக்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `டிமான்ட்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமின் 58-வது படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.