ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வைகாசி விசாக திருவிழா!

சுவிஸ் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இரண்டாம் நாள் வைகாசிவிசாக திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.


கதிரவேலனின் விகாரிவருட பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஆலய பெருந்திருவிழாவில் இரண்டாம் நாள் முருகனின் பிறந்ததினமான வைகாசிவிசாகத்தில் சற்கோணவடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு 108 சங்காபிசேகம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

லண்டனிலிருந்து வருகைதந்துள்ள சிவாகமரத்னம், வேதாகம விசாரதா ந.ராமு(எ)அகத்தீஸ்வரக்குருக்கள், ஆலயபிரதமகுரு சிவாகமரத்னம், கிரியா கலாமணி முத்துமீனாட்சிசுந்தரம் முத்துச்சாமிக்குருக்கள், யாழ்.சுன்னாகம் கதிரமலை சிவன்கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரிய ரத்னம் சிவஸ்ரீ சோம சிறிகரக்குருக்கள் ஆகியோர் சங்காபிசேகத்தை சிறப்பாக நடத்தினர்.

செங்காலன் நாதசுர வித்துவான் மா.செந்துரன் தலைமையில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தவில் வித்துவான் மு.நாகேந்திரம் மற்றும் நாதசுர வித்துவான் குணதாஸ் மோகனதாஸ், தவில் வித்துவான் சுதா கோபி ஆகியோரின் மங்கள இசை சிறப்பாக இடம்பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.