பிரேஸிலில் துப்பாக்கி பிரயோகம்!!

பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11 பேர் உயிரிந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


பிரேசிலின் பாரா மாநிலத்தின் பெலம் நகரிலுள்ள களியாட்ட விடுதி ஒன்றிலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆறு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிந்துள்ளதாகவும், காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.